குஜராத் மாநிலம் துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு ‘துவாரகாதீசன்’ என்று பெயர். ‘ஜகத் மந்திர்’ என அழைக்கப்படும் இந்த கோயிலின் பிரதான வாசலுக்கு ‘சுவர்க்க துவாரம்’ என்று பெயர். இதைக் கடந்தால் ‘மோட்ச துவாரம்’ எனும் வாசல் வரும். அதையும் கடந்தால் துவாரகை மன்னனான கண்ணனின் தரிசனம் கிடைக்கும். இந்த இரு வாசல்களுக்கும் இடையே தேவகி, பலராமர், ராதா, சத்தியபாமா, லட்சுமி, சரஸ்வதி, காயத்ரியின் சன்னதிகள் உள்ளன. ருக்மணி தேவிக்குத் தனிக்கோயில் இங்குள்ளது.