பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி, மூலவர்தினமும் சந்தனகாப்பு, தங்க, வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம் என அருள்பாலிக்கிறார்.மேலும் உற்ஸவர் தினமும் பூதகி, சிம்ம, அன்ன, ரிஷப வாகனங்களில் வீதிவலம் வருகிறார். 8ம் நாளான மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு அம்மன்குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார். மறுநாள் காலை தொடங்கி மாலை வரை அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின்தீப தேரோட்டம் நடக்கிறது.