தேவதானப்பட்டி : சில்வார்பட்டி முனையடுவ நாயனார் கோயிலில் நடந்த குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த கோயிலில் பங்குனி பூசம் நட்சத்திரத்தையொட்டி விநாயகர், முருகன், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவரான முனையடுவ நாயனார் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிேஷகம் நடந்தது. மகேஷ்வரபூஜையை சிவனடியார்கள் செய்தனர். குருபூஜையை முன்னிட்டு முக்கிய வீதிகளில் முனையடுவ நாயனார் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.