பதிவு செய்த நாள்
25
மார்
2021
05:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர், போயம்பாளையம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், நூற்று கணக்கின் பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், சிறப்பு பூஜைகள், அன்னதானம், சாமி ஊர்வலம் வருதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று புதன்கிழமை உச்சி கால பூஜைகள், கம்பம் கங்கையில் சேர்த்தல், நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவையொட்டி, மாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.