தேவகோட்டை: தேவகோட்டையில் சமயபுர மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா 16ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அன்னபூரணி காமாட்சி மூகாம்பிகை உட்பட தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தினமும் மாலையில் அம்மன் கரகம் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. பங்குனி செவ்வாய் அன்று பக்தர்கள் பால்குடம் ரத காவடி வேல் காவடி எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் இரவு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூச்சொரிதலை தொடர்ந்து 500க்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.