பதிவு செய்த நாள்
27
மார்
2021
05:03
சென்னை :மாணவ - மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டி, பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவ ஹோமம், நாளை நடக்கிறது.
சென்னை, பெசன்ட்நகர், ஆறாவது குறுக்கு தெருவில் ரத்னகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கு, ஆண்டுதோறும் பொதுத் தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக, தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவ ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக, தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவ ஹோமம், நாளை காலை, 7:00 மணிக்கு நடத்தப்படுகிறது.