பதிவு செய்த நாள்
29
மார்
2021
05:03
விருதுநகர் : மாவட்டத்தில் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், சொக்கநாதர் கோயிலில் முருகன் சன்னதி, வெயிலுகந்தம்மன் கோயிலில் முருகன் சன்னதி, கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி, சொக்கர், வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில்கள், அருப்புக்கோட்டை புளியம்பட்டி பழனியாண்டவர், வாலசுப்பிரமணியர், சொக்கநாதர் சுவாமி கோயில்கள், சாத்துார் சுப்பிரமணிய சுவாமி, காசி விஸ்வநாதர் கோயில்கள், சிவகாசி கருப்பசாமி, மாரியம்மன், பத்திரகாளியம்மன், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. காரியாபட்டி பராசக்தி மாரியம்மன், அச்சம்பட்டி முத்தாலம்மன் கோயில்கள், ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி, பழநியாண்டவர், நத்தம்பட்டி வழிவிடுமுருகன், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர், குல தெய்வ கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை, பக்தர்கள் தரிசித்தனர். பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.