திருவாடானை முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 05:03
திருவாடானை : பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட பக்திபாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழக்கரை: கீழக்கரை அருகே வைகை கிராமத்தில் சேதுபதி மன்னர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில்பங்குனி உத்திர விழா நடந்தது.மார்ச் 18 அன்று காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.நேற்று காலை 7:00 மணியளவில் வன்னி விநாயகர் கோயிலில் இருந்து காவடி, பால்குடம் உள்ளிட்டவைகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.கீழக்கரை தொழிலதிபர் எஸ்.ராஜா அன்னதானம் வழங்கினார். மாலையில் 108 விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஆர்.வசவலிங்கம், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.