குயவன்குடி குமரகுருபர சுப்பையா கோயில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 05:03
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயவன்குடி குமரகுருபரசுப்பையா கோயில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் 300 பெண் பக்தர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குமரகுருபர சுப்பையா கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 19ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடிகளுடன்பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு 3:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை நடந்தது. முன்னதாக மாலையில் அபிேஷக அலங்காரத்துடன்ஆறுகால பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் பூ வளர்க்கும் பூஜை துவங்கியது. குயவன்குடி, வாலாந்தரவை, வழுதுார், பெருங்குளம், ரெகுநாதபுரம், ஏந்தல் உள்ளிட்ட ஏராளமான சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய விறகுகளை பயன்படுத்தி பூக்குழி வளர்க்கப்பட்டது. இதே போல் விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்தபடி பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்வு அதிகாலை 4:30 மணி வரை நடந்தது. இரவு 7:00 முதல் நள்ளிரவு 3:00 மணி வரை திருப்புகழ் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் புதுச்சேரி தமிழ்ச்சங்க சிறப்பு தலைவர் நீதிபதி சேது முருகபூபதி சொற்பொழிவு நடந்தது. இரவு முழுவதும் நேர்த்திக்கடனாக அறுவடை செய்த புது நெல் அரிசியில் பக்தர்களின் அன்னதானம் நடந்தது.