பரமக்குடி பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 05:03
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா நடந்தது.
இக்கோயிலில் மதுரை அழகர் கோவிலைப் போன்றே வருடந்தோறும் விழா நடப்பது வழக்கம்.மார்ச் 27ம் இரவு 8:00 மணிக்கு மேல் அனுக்கையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் மாப்பிள்ளை கோலத்தில் ஆடி வீதி வலம் வந்தார். பின்னர் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நிறைவடைந்து காலை 9:55 மணிக்கு சவுந்தரவல்லி தாயார் - சுந்தரராஜ பெருமாள் ஊஞ்சலில் சேவை சாதித்த படி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் ஊஞ்சல்சேவையும், மார்ச் 31 அன்று மாற்றுத் திருக்கோல அலங்காரம் நடைபெறும்.ஏப்.,1 காலை சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லக்கில் வீதி வலம் வருவார். ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஷ்டிகள் செய்துஉள்ளனர்.