ஸ்ரீரங்கம் : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, நம்பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.