உடுமலை:புனிதவெள்ளிக்கு முன்பு வரும், காலத்தை, தவகாலமாக கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். இத்தினத்துக்கு, முன்பு உள்ள ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு தினமாக அனுசரிக்கப்படுகிறது.நேற்று, உடுமலை, தளி ரோடு, சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் மற்றும் அற்புத அன்னை ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு தினம் பின்பற்றப்பட்டது.கிறிஸ்தவர்கள், குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடியும், கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஊர்வலமாக சென்றனர். சிறப்பு திருப்பலியும் நடந்தது.