பதிவு செய்த நாள்
30
மார்
2021
10:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு அபிஷேகம் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா சென்றனர். மதுரை பகுதி பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்தனர். இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவர், சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்து மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியானது. பின்பு வருடாபிஷேகம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.பாண்டியன் நகர் ஸ்ரீகல்யாண விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு அபிஷேகம், பூஜைகள் முடிந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், உத்திரத்தை முன்னிட்டு பிரசன்ன வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்,திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீநிவாசா நகரிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜைகள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானக்கு பூஜைகள், திருக்கல்யாணம் நடந்தது
மேலுார்: மேலுார், மில்கேட், புலிமலைப்பட்டி, வெள்ளிமலை, செம்மினிபட்டி ஆண்டிபாலகர், கம்பூர் கருங்குட்டுகருமலை ஆண்டிசுவாமி கோயில்களில் பக்தர்கள்காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.