குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ராமகிரி கல்யாணநரசிங்க பெருமாள் கோயிலில், பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோயிலில், 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேரோட்டத்தின் போது, தேரின் சக்கரம் உடைந்து நின்றது. அதன் பிறகு கோயில் திருப்பணிகள் துவங்கி நடந்து வந்தன. கட்டட பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நடந்த நிலையில், ரூ. 10 லட்சம் செலவில்தேர் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது. தேருக்கு நான்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. சமீபத்தில் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பங்குனி தேரோட்டம் நடந்தது. ராமகிரி, குஜிலியம்பாறை, ஆர்.கோம்பை, வடுகம்பாடி சுற்றுப்பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். கோயில்நிர்வாக தலைவர் கருப்பணன், செயலாளர் ஜி.எஸ்.வீரப்பன், செயல் அலுவலர் மகேஸ்வரி பங்கேற்றனர்