பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணியம் சுவாமி கோவிலில், நேற்று பங்குனிஉத்திர தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சிறிய விநாயகர் தேர் வடம்பிடித்து, மலையை சுற்றி வலம்வந்தது. மாலை, 4.30 மணிக்கு பெரிய தேரான சுப்ரமணியம் சுவாமி தேர் வடம்பிடித்து மலையை சுற்றிவலம் வந்தது. 6:00 மணிக்கு தேர்நிலை அடைந்தது. ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் ரங்கநாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
* குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி கோவில், சவுண்டம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் கோவில், வாசுகி நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில், பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.
* நாமக்கல் - சேலம் பைபாஸ், கருங்கல்பாளையம், கருமலை, ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபி?ஷகம் செய்யப்பட்டது.
* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், முருகனுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* நாமக்கல், மாருதி நகர், ராஜ விநாயகர் கோவிலில், கல்யாண சுப்பிரமணியர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.