பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திர திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, காலை மற்றும் மாலையில் நந்தி, அன்னம், யானை, பூதகி, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில், சுவாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 25ல் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று காலை பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சங்கரன் மற்றும் உபயதாரர்கள், சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.
* கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபானி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தை முன்னிட்டு உத்திரம் தினம் கொண்டாடப்பட்டது. முருகனுக்கு பால், தயிர், இளநீர், பலரசம், சந்தனம், பன்னீர், மற்றும் வாசனை பொடிகள் கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு, முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.