பதிவு செய்த நாள்
31
மார்
2021
07:03
சென்னை; சென்னை அண்ணாசாலை தர்காவின், சந்தன கூடு திருவிழாவை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று துவங்கி வைத்தார்.சென்னை அண்ணாசாலையில், பிரசித்தி பெற்ற, ஹஸ்ரத் சையது மூசா ஷா காதரி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின், ஆண்டு விழா மற்றும் சந்தன கூடு திருவிழாவின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, திருவிழாவை துவங்கி வைத்தார்.அப்போது, கவர்னருக்கு பாரம்பரிய தலைப்பாகையை, தர்காவின் தலைமை பரம்பரை அறங்காவலர் சையது மஸ்ஹருத்தீன் அணிவித்தார். இதன் பின், விழாவின் ஆண்டு மலரை, கவர்னர் வெளியிட்டார். தொடர்ந்து, ஹஸ்ரத் செய்யது மூசா ஷா காதரி சமாதியின் மீது, மலர் போர்வை போர்த்தி, வழிபாடு செய்தார்.விழாவில், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி அஸிம்ஜா, மூத்த பரம்பரை அறங்காவலர் சையது வஜித்துதீன், பரம்பரை அறங்காவலர் சையது சாதிக் மொஹிதீன் உட்பட, பலர் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற அறங்காவலர் பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு, கவர்னர், சந்தனக் கூடு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.