பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் மார்ச் 29 இல் அணுக்களுடன் விழா துவங்கி அன்று இரவு முதல் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை நிறைவடைந்து, நேற்று காலை நான்காம் கால பூஜையும், மகா பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நிறைவடைந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.