நல்ல புத்தகங்களை படித்தால் அறிவு வளர்ச்சி பெறும். கல்விக்காக செலவழிக்கும் ஒவ்வொரு காசும் மனிதனைப் பண்படுத்தும் ஆயுதம். கல்வியை யாராலும் அழிக்க முடியாது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, அவர்கள் கேட்கும் புத்தகங்களை தாராளமாக வாங்கிக் கொடுங்கள். வெறும் பாடப் புத்தகங்கள் மட்டுமல்ல. பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள், மார்க்கக் கல்விக்கான ஆன்மிக நுால்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். ‘‘கல்விக்கு அழிவே இல்லை. அது போன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை’’ என்கிறார் நாயகம்.