பதிவு செய்த நாள்
08
ஜூன்
2012
11:06
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சின்னக்கல்வராயன் மலை, கருமந்துறையில் உள்ள பிரசித்தி பெற்ற இளையராமர் மற்றும் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் தேரோட்டம், நாளை (ஜூன் 9) நடக்கிறது. சின்னக்கல்வராயன் கருமந்துறை கிராமத்தில், பழமையான இளையராமர் மற்றும் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. அக்கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் (ஜூன் 6) சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, ஸ்வாமிகளுக்கு சிறப்பு தாம்பூலம் எடுத்தல் நிகழ்ச்சிகளும், இரவு 9 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இன்று காலை, கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 4 மணிக்கு சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு மேல் இளையராமர், அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மன் ஸ்வாமிகள் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (ஜூன் 9) காலை 7மணிக்கு ஸ்வாமிகள் ஆற்றுபந்தல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், பத்து மணிக்கு மேல் பெரிய திருத்தேர் தேரோட்ட நிகழ்ச்சியும், வண்டி வேடிக்கையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஊர் கவுண்டர்கள், விழாக்குழுவினர் மற்றும் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.