பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
05:04
பொள்ளாச்சி:புனித வெள்ளியை ஒட்டி, பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் விரதமிருந்து நோன்பு கடைபிடிப்பது வழக்கம். இந்தாண்டும் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, புனித லுார்து அன்னை தேவாலயத்தில், பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார், கோவை தலைமையிடத்தை சேர்ந்த பங்கு தந்தை கிருபாகரன் ஆகியோர் தலைமையில், சிலுவைப்பாதை சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.ஏராளமானோர், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் ஆராதனை வழிபாட்டில் பங்கேற்றனர்.இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று இறந்த நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, அந்த நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் ஆலயத்தில் நடைபெற்றது.இதயைடுத்து, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் பெருவிழாவை கொண்டாடும் வகையில், நள்ளிரவு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு ஆராதனைகள் நடைபெறுகிறது.வால்பாறைவால்பாறையில் புனித வெள்ளியை ஒட்டி, நேற்று சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், மறைமாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டம் நடந்தது. இதே போல், ஆர்.சி., சார்சில் ஆலய பங்கு தந்தை மரியஜோசப் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது.கோ-ஆப்ரெடிவ் காலனி சென்லுக் சர்ச்சில் ஆலய பங்கு தந்தை ஷாஜி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ரொட்டிக்கடை புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி ஆலயங்களில், புனித வெள்ளி சிறப்பு ஜெபக்கூட்டம் நடந்தது.முன்னதாக, வால்பாறை சென்லுக் சர்ச் கிறிஸ்தவர்கள் தேவாலயத்திலிருந்து ஸ்டேன்மோர் வரை, சிலுவை பாதை ஊர்வலம் சென்றனர்.