பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
05:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 49.98 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வர்.அவர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படும். கடந்த பிப்., மாதம் பிரம்மோற்சவம் நடைபெற்றது.அதன் பின், உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், ரொக்கம், 49.98 லட்சம் ரூபாய், தங்கம், 292 கிராம், வெள்ளி, 493 கிராம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பக்தர்கள், உண்டியல் காணிக்கை, 17.52 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.இக்கோவிலின், ஆறு உண்டியல்களில், பக்தர்கள், ஐந்து மாதங்களில் செலுத்திய காணிக்கைகள் கணக்கிட, உதவி ஆணையர் கவினிதா, ஆய்வாளர் சிவகாமி, செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.இதில், 17 லட்சத்து, 52 ஆயிரத்து, 601 ரூபாய், 176 கிராம் தங்கம், 134 கிராம் வெள்ளி, காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.