அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
30 ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூசாரிகள் மற்றும் மிராசுதார் ஆகியோர் குண்டம் இறங்கினர். நேற்று 31 ம் தேதி முதல் 2 ம் தேதி வரை தினசரி காலை 7 : 30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 7 : 00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று. 3 ம் தேதி நேற்று குண்டம் திருவிழா நிறைவு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கொடி இறக்கப்பட்டு காப்பு அவிழ்க்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.