ராமேஸ்வரம் : ஈஸ்டர் பண்டிகையையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று இயேசு உயிர்த்து எழுந்தநாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.ராமேஸ்வரம் வேர்க்கோடு சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் தேவசகாயம் சிறப்பு திருப்பலி நடத்தினார்.மேலும் தங்கச்சிமடம்இ பாம்ப னில் உள்ள குழந்தை இயேசு சர்ச், தெரசாள் சர்ச், ஆரோக்கிய மாதா சர்ச்களில் ஈஸ்டர் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான இறை மக்கள் பங்கேற்றனர்.
தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் அன்னை சர்ச்சில் உயிர்ப்பு பெருவிழா நடந்தது.இயேசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் மரணத்தில்இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக உயிர்ப்பு பெருவிழா நடைபெறும்.தொண்டி அருகே காரங்காடு செங்கோல் அன்னை சர்ச்சில் நடந்த விழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது. காரங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. முதுகுளத்துார் திருவரங்கம் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் ஜெபஸ்டியன் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.