ஊட்டி : பர்லியார் அருகே அகத்திய மாமுனிவரின் ஆஸ்ரமத்தில் பவுர்ணமி பூஜை நடந்தது. தங்கராஜ் சுவாமி தலைமை வகித்தார். யாகம் நடத்தப்பட்டது. ராஜு பெட்டன் வள்ளலாரின் கொள்கைகள் பற்றி விளக்கினார். காட்டேரி தூரட்டியை சேர்ந்த பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து சித்தர்கள் பூஜை நடந்தது.