சூலூர்: சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடக்கும். கடந்த, 23 ம்தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 30 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று காலை நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அழைக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தபின், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.