பழநி: பழனி முருகன் மலைக்கோயில் படிப்பாதையில் ஆக்கிரமித்து கடைகள் செயல்படுகின்றன
பழநி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் படியில் மலையேறிச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபத்தில் உள்ள உடல் வெப்பத்தை அறியும் கருவி வழியே பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் மலைக்கோயில் செல்லும் படி பாதையில், தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்வோர், கோயிலில் பணிபுரியும் சிலரின் ஆதரவோடு பல்வேறு பொருட்களை வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வியாபாரம் செய்கின்றனர்.
கோயிலில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், முக கவசம், கிருமி நாசினிகள் இல்லாமல் படிக் கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. போலீசாரும், அங்கு பணி புரியும் செக்யூரிட்டிகளும் இதை கண்டுகொள்வதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.