ஆயிரங்கண் மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2021 09:04
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் விழா துவக்கமாக, திருக்கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கும் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்ய கொடி ஏற்றப்பட்டது. விழாவின் போது அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப்.13ல் பொங்கல், 14ல் அக்னிசட்டி, பூக்குழி இறங்குதல் நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழா ஏற்பாடுகளை பரிபாலன சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.