பதிவு செய்த நாள்
08
ஏப்
2021
09:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின், 1,004ம் அவதார உற்சவ விழா, நாளை துவங்குகிறது.
ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆண்டுதோறும், சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானுஜரின் அவதார உற்சவ விழா, ஸ்ரீபெரும்புதுாரில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, உற்சவ விழா ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு, ராமானுஜரின், 1004ம் ஆண்டு அவதார விழா, நாளை துவங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பக்தர்கள் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உற்சவ விழா விபரம்நாள் காலை உலா மாலை உலா* ஏப்., 9- தங்கப் பல்லக்கு மங்களகிரி10 பல்லக்கு யாளி வாகனம்11 பல்லக்கு மங்களகிரி12 சிம்ம வாகனம் மங்களகிரி13 பல்லக்கு ஹம்சவாகனம்14 வெள்ளை சாத்துபடி, குதிரை வாகனம், கூரேச விஜயம் மங்களகிரி15 சூர்யபிரபை சந்திர பிரபை16 திருமந்திரார்த்தம், சேஷ வாகனம் யானை வாகனம்17 திருத்தேர் புஷ்ப பல்லக்கு18 சாத்துமுறை, தங்கப்பல்லக்கு மங்களகிரி19 கந்தபொடி வசந்தம்.