பதிவு செய்த நாள்
08
ஜூன்
2012
11:06
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் தானப்ப சுவாமி கோயிலில் நூதன பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நடந்தது. ராஜவல்லிபுரம் செப்பறை தானப்ப சுவாமி கோயிலில் நூதன பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ராஜவல்லிபுரம் செப்பறையில் கர்காத்தார் குல தெய்வமான தானப்ப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நூதன பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. ஸ்தல சுத்தி பூஜை, வாஸ்துசாந்தி சிறப்பு ஹோமம், தானப்ப சுவாமியின் ரூப பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக விழாவான நேற்று சிறப்பு ஹோமம், கும்ப பூஜை, பூர்ணாஹூதி, சகல திரவியங்களால் அபிஷேகம், தானப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம், மகாபிஷேகம், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்தை சீவலப்பேரி வடக்குவா செல்வி அம்மன் கோயில் அர்ச்சகர் கோவிந்தன் குழுவினர் நடத்திவைத்தனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தானப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. விழாவில் தானப்ப சுவாமி அறக்கட்டளை தலைவர் வைத்தியநாதன், செயலாளர் சுப்பையா, பொளாளர் ஆர்.டி.எஸ்.சங்கர், கவுரவ ஆலோசகர்கள் தில்லைநாயகம், ராமமூர்த்தி, சேதுநாகராஜன், வால சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், மகேஸ்வரன், கார்காத்தார் சங்க மாவட்ட துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தானப்ப சுவாமி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.