கள்ளக்குறிச்சி; நல்லாத்துாரில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 6 நாட்கள் தினமும் சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது. 7 வது நாளான நேற்று ஆகம விதிகள் படி பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 4 மணியளவில் உற்சவர் மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு தேருக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவில் வலம்வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.