சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஏப். 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப். 7ஆம் தேதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். இன்று (ஏப். 11ம்) தேதி சப்பர ஊர்வலம் நடக்க இருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அது நிறுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு மட்டும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.