மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் யுகாதி திருவிழா நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 05:04
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அடுத்த மூலனூர் அருகே உள்ள மணலூர் செல்லாண்டியம்மன் திருக்கோவிலில் யுகாதி பண்டிகை கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது என திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் ,கன்னிவாடி அருகே உள்ள மணலூர் செல்லாண்டியம்மன் திருக்கோவில் ஏப்ரல் 12 ம் தேதி மற்றும் 13 ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுவதாக இருந்த யுகாதி திருவிழா தமிழக அரசின் பாதுகாப்பு முன்னேற்பாடு தொடர் நடவடிக்கை காரணமாக திருவிழா நடைபெறாது என அறிவித்துள்ளனர். அபிஷேகம் மற்றும் தீர்த்தம் கொண்டு வந்து தீர்த்தம் செலுத்த அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இக்கோவிலில் பிரதி ஆண்டு யுகாதி அன்று நடைபெறும் யுகாதி திருவிழா கிராம பகுதியில் பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. கோவில் நிர்வாகம் யுகாதி திருவிழாவை நடத்தக்கூடாது என தடை செய்ததால் பொதுமக்கள் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.