தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளத்தில் பிரசித்தி பெற்ற சந்தான கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு, பெருங்குளம் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வும், வீதி ஊர்வலமும் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இந்த விழா நிகழ்வு ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்தில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் எனவும் கோவில் அறங்காவலர் அசோகன் தெரிவித்தார்.