வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 05:04
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சந்தனகாப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து வீரக்குமாரசாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகங்காட்டு வலசு தம்பிக்கலையசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் திருக்கோவில், ஆனைமேல் அழகியம்மன் திருக்கோவில், ஏரி மொண்டிக் கருப்பணசாமி கோவில் உட்பட்ட கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை சிறப்பாக நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.