Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் மிதுனம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ... சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன் சிம்மம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
கடகம்: தமிழ் புத்தாண்டு (பிலவ வருட) பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2021
22:32

புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்

பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பயணங்கள் செய்ய வாய்ப்புக்கள் அமையும். இதுவரை இல்லாத சுறுசுறுப்பை உணர்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.  இறை சிந்தனை மேலோங்கும். பழைய தோல்விகள் மெல்ல மறைந்து மாறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் செயல்களில் ஒரு பிடிப்பு ஏற்படும். தெய்வீக சிந்தனை  மேலோங்கும். அதிகம் உழைக்க அஞ்ச மாட்டீர்கள். அதற்கேற்ற நற்பலனும் கிடைக்கும். வருமானமும் கூடும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள்  வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும்.

நிதி: குரு பார்வை காரணமாக நிதி நிலைமை அமோகமாக இருக்கும். என்றைக்கோ கொடுத்த கடன்கள் திரும்ப வரும். முதலீடு செய்துவிட்டு மறந்துபோன தொகைகள் இரட்டிப்பு லாபமாகத் திரும்ப வரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சனி பார்வை காரணமாக லாபங்கள், நன்மைகள் மற்றும் வர வேண்டிய தொகைகள்  சற்று தாமதமானாலும் ஏமாற்றமின்றிக் கிடைக்கும். பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு உண்டு. சில வியாபாரங்களில் அமோக லாபம் வரும்.

குடும்பம்: நல்ல பலன்களைப் பெறப் போகும் ஆண்டாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இத்தனை காலம் உங்களை மதிக்காதவர்கள் கூட மதிப்புடன் பேசுவார்கள். உங்கள் அருமையை குடும்பம் உணரும். அப்படி உணர்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று நேரிடும். பிரிந்து சென்றவர் மீண்டும் வந்து இணையவோ அல்லது பிரிந்தது பற்றி வரைந்தவை வாய்ப்பு உள்ளது. நடுவில் சிலநாட்களுக்கு கலகலப்பு குறைந்தாலும் பொதுவாக குரு பார்வை காரணமாக மகிழ்ச்சியான சூழல் தான் நிலவும். திருமணம் போன்ற காரணத்தால் புதிய நபர் சேர வாய்ப்பு உள்ளது.

கல்வி: மாணவர்களுக்கு முன் எப்போதையும் விட கல்வியில் அதிக நாட்டம் உண்டாகி மேலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எந்த குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் இத்தனை காலம் வலுவற்று இருந்தீர்களோ அதில் அக்கறை கொண்டு கவனத்துடன் படிப்பதால் இப்போது அது உங்களின் பிரியத்துக்குரிய பாடமாக மாறிவிடும். மேல்படிப்புக்காகப் பல முறை முயன்றும் கிடைக்காத படிப்புக்கு இப்போது வழி வகை பிறக்கும். குறிப்பாக வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். சிலருக்குச் வருமானமும் படிப்பும் ஒருங்கே அமையப்பெற்று மகிழ்ச்சி பெருகும்.

பெண்கள்:
எதிரிகளின் தொல்லை நீங்கி நட்பு அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால் அற்புத ஆண்டாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உயரும். தெய்வ அனுகூலம் காரியசித்தி, பூர்வீக சொத்துகள் ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

உடல் நிலை:
பொதுவாகவே இப்போதெல்லாம் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். . ‘இயற்கை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் மேலும் நல்ல முறையில் இருக்கும். தியானம் யோகம் போன்ற செயல்களாலும் மாற்று மருந்தாலும் நலம் காண்பீர்கள்.  வழக்கமான உடற்பயிற்சியைக் கைவிட வேண்டாம்.

தொழில்/பணி:
தொழில், வணிகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும், சாதகமான பலன்களும் கிடைக்கும். உங்களின் வளமும், சக்தியும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் உண்டாக வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய நல்ல செய்தி கிடைக்கும். பணியாளர்கள் சில கடுஞ்சொல் சந்திக்க நேரிடும். இருப்பினும். உங்கள் வேலையை சரியாக செய்து வருவதால் பேசியவர்கள் வருந்தி மன்னிப்புக் கேட்பார்கள். அவசரப்பட்டு பதிலடி தர வேண்டாம்.

பரிகாரம்:
ராமரை வணங்கினால் நற்பலன் உண்டு.
பாடல்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

பூசம்: உங்கள் மதிப்பு உயரும்


பொதுவாக அனுகூலம்  ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  செயல்பாடுகளில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் இருந்தாலும் அதன் பலன் இனிக்கும். நண்பர்களுக்காகவும் உறவினருக்காகவும் தூது சென்று சமரசம் பேசுவதால் உங்கள் மதிப்பு உயரும். எது செய்தாலும் பணிவன்புடன் செய்வது நன்று. .கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு இரண்டாம்பேருக்குத் தெரியாமல் உதவி செய்து திருப்தி அடைவீர்கள். பாராட்டுகள். நல்ல முடிவுகள் ஏற்படும். நான்கு  சக்கர வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.


நிதி:
இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்ட காலம் போய் இனி அதிகப் பணவரவு காரணமாக மனம் மகிழும் நேரம் வரும். தேனீ போல் ஓடி உழைத்தும் சற்றுக் குறைவான வருமானமே வருவதாக நீங்கள் அங்கலாய்த்ததற்கு நேர்மாறாக ஏஸி அறையில் உட்கார்ந்து சந்தோஷமாய்ப் பணத்தை அள்ளி எண்ணுவீர்கள்.  முன்பு எப்போதோ வாங்கிபபோட்ட நகைகளும் சொத்துக்களும் இப்போது மிக அதிக மதிப்புக் கொண்டிருக்கும். வெள்ளி தங்கம் என்று பொருட்கள் சேர்வதால் மனதில் நிம்மதி பெருகி இரவில் தூக்கம் வரும். உரிய முறையில் வரிகளைக் கட்டி மேலும் நிம்மதியடைவீர்கள்.

குடும்பம்: குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். குழந்தைகளின் விருப்பத்தை  நிறைவேற்ற சிறிதளவு சிரமப்பட்டாலும் அவர்கள் மனநிறைவு உங்களுடைய சிரமத்தை மறக்கச் செய்யும். இப்போது நீங்கள் செலவு செய்வது அவர்களின் வருங்காலத்தில் அவர்களுக்குப் பெரிய நன்மை செய்யும் என்பால் இதை நீங்கள் முதலீடாகவே நினைக்கலாம். குடும்பத்தில் இதனால் மகிழ்ச்சி நிலவும்.

கல்வி:
கல்விக்கடனுக்கு உடனே அனுமதி கிடைக்கும்.  குருபார்வை காரணமாகப் பாடங்கள் சுலபமாக மனதில் பதியும். ஆசிரியர்கள் தனிப்பட்ட அக்கறை எடுத்துச் சொல்லித் தருவார்கள். அதிக நம்பிக்கை காரணமாக எந்தப் பாடத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். மிகத் தெரிந்த பாடமானாலும் அதை மீண்டும் ஒரு முறை நன்கு படித்துக்கொள்வதால் தவறில்லை. விண்ணப்பங்களைச் சரியாக நிரப்பியிருக்கிறீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பதுடன் பெரியவர்களைச் சரிபார்க்கச் சொல்லுங்கள். அலட்சியம் எந்த அம்சத்திலும் வேண்டாம்.

பெண்கள்:
எதையும் வெல்லும் தன்னம்பிக்கையும் தைரியமும் கைவரப்பெறுவீர்கள். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். தனிப்பட்ட பணவரவு மனதிருப்தியை தரும். சேமிப்பு அதிகரிப்பதால் நம்பிக்கையும் அதகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

உடல் நிலை:
சரியான நேரத்திற்கு சாப்பிட்டு சரியான நேரத்திற்கு தூங்கி உடல்நலனை பேணினால் பிரச்னை ஏதும் வராது. உடல்நலம் சரியாக சிறிதுகாலம் எடுத்துக்கொண்டாலும் நல்ல முறையில் சீராகும் கவலை வேண்டாம். உடல் உபாதை தரும் சிரமத்தை விட அது பற்றிய உங்கள் பயம் தரும் சிரமம் அதிகமாக இருக்கும். எனவே பயப்படாமல் எதிர்கொள்ளுங்கள்.

தொழில்/பணி:
தொழில், வியாபாரம் சிறக்கும். நினைத்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் திறமை பாராட்டைப் பெற்று தரும். பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். பணிகள் அதிகரித்தாலும் ஆதாயம் நிறைய இருப்பதால் உற்சாகமாக வேலை செய்வீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.. விடா முயற்சியுடன் எதையும் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

பரிகாரம்:
குருவை வணங்குங்கள். நன்மை பெருகும்.
பாடல்:
குருவே பிரம்மா, குருவே விஷ்ணு
குருவே தேவன் மகேஸ்வரனாம்
குருவே என்றும் பரம்பிரம்மம்- அந்த
குருவை நன்றாய் வணங்குகிறேன்

ஆயில்யம்: அதிக மகிழ்ச்சியூட்டும் செய்தி வரும்.
பொதுவாக சனியும் குருவும் ஏழாம் வீட்டிலும் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பிறக்கப் போகும் புத்தாண்டு சுபமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய நல்ல நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். வீட்டில் திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு நீங்கள் குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வணங்கலாம். வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் வரும். அடுத்தடுத்து நல்ல நிகழ்வுகள் வந்தபடி இருக்கும். இந்த வருடம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம்.  ஆனால் அதன் பலன் நல்லபடியாக இருக்கும். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

நிதி:
பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் உங்களின் ராசிக்கு இந்த ஆண்டில் துவக்கத்திலேயே குருவின் பார்வையில் கிடைப்பது யோகம். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் சம்பாதிக்கும் வழிகளைத் திறம்பட யோசித்து அதன்படி செயல்பட்டு வெற்றி காணுவீர்கள். பங்குச்சந்தை மார்க்கெட்டில் செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். முன்பு செய்த முதலீடுகளை இப்போது பெருக்கும் வழி அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். ஒன்றிற்கு மேற்பட்ட இனங்களில் லாபம் வரும். குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குடும்ப வருமானம் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும். திருமகள் கடாக்ஷ என்பார்களே அது உங்களுக்கு இந்த ஆண்டு நிச்சயமாக உண்டு. முன்பு பயத்தின்காரணமாகச் செய்யாமல் விட்ட முதலீடுகளை இப்போது செய்து பலனடைவீர்கள்.

குடும்பம்:
சந்தோஷமான சூழலில் ஓரிரண்டு விஷயங்கள் பானகத்தில் அகப்பட்ட மண் போல் சங்கடப்படுத்தினாலும் அவையெல்லாம் தற்காலிகமானவையே. குடும்பத்திற்குள் உள்ள யாரோ ஒருவருடைய தலையீட்டால் அனைத்தும் சீராகி நிம்மதி மீளும்.  குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். சனி பகவான் உங்களைக் குடும்பத்திற்காகவும் மனைவி அல்லது கணவருக்காகவும் அதிகமாக உழைக்க செய்வார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். தாய்மாமனிடமிருந்து அதிக நன்மைகள் கிடைக்காதிருந்த நிலை மாறி சந்தோஷ உறவு நிலைக்கும்.

கல்வி:
குரு பார்வை காரணமாக உங்களுக்கு இந்த ஆண்டு எங்கும் எதிலும் வெற்றி நிச்சயம். ஆசிரியர்கள் உங்கள் மேல் அன்பு செலுத்துவதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் பணிவு காட்ட வேண்டியது அவசியம். கல்விக்காகவும் விளையாட்டு மற்ற திறமைகளுக்காகவும் பரிசுகள்  வாங்குவீர்கள். மற்ற மாணவர்கள் உங்களை அண்ணாந்து பார்த்து வியப்பார்கள். மேல்படிப்புக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்குச் சிறிது தாமதம் அல்லது சஸ்பென்ஸூக்குப் பிறகு மகிழ்ச்சியூட்டும் செய்தி வரும். வெளிநாட்டுக்குச் செல்ல விசா சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும்.

பெண்கள்:
இ துவரை பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து வெறுப்படைந்து வந்த நீங்கள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரப்போகிறீர்கள். வருகின்ற புதிய ஆண்டு மிகவும் உற்சாகமாகமாக இருக்கப்போகிறது.  தைரியத்தின் காரணமாகச் சாதிப்பீர்கள். பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பல பல வேலைகளை நீங்கள் தனியாய் நின்று முனைப்புடன் செய்து வெற்றி காண்பீர்கள்

உடல் நிலை:
குருபார்வை காரணமாக உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எனவே மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். இது உற்சாகத்தை அதிகரிக்கும். பல நாள் சரியாகாதோ என்று பயந்துகொண்டிருந்த விஷயத்துக்குப் புதிய தீர்வுகாண்பீர்கள். சருமப்பிரச்னை வந்து போகும். அது பற்றிப் பெரிய அளவில் பயந்து கொள்ள வேண்டாம். அதிக காலத்துக்குத் தொடராது.
தொழில்/பணி:
வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.  பெரிய முயற்சிகளில் பெரிய வெற்றி உண்டாகும். முதலீடுகளை எதில் போடலாம் என்பது பற்றிச் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திற்கு புரமோசன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் உழைப்பைக் கண்டுகொள்ளவில்லை என்ற குறை நீங்கும். உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமின்றிப் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்:
அபிராமியை வணங்கி அனைத்து நலன்களும் பெறுங்கள்.
பாடல்:
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 
temple
உத்திரம்,2,3,4 ம் பாதம்: சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள்பொதுவாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.