பல்லடம்: பல்லடம் அருகே பெருமாள் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாங்கங்கள் வைத்து வழிபாடு நடந்தது.
தெலுங்கு வருட பிறப்பு என்று கூறப்படும் யுகாதி ஆண்டு துவங்கியது, பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பிலவ வருட புத்தாண்டை முன்னிட்டு, கனிகள், மற்றும் பஞ்சாங்கங்கள் வைத்து பூஜை நடந்தது. இந்த ஆண்டு மழை பொழியும். ஆடி வெயில் அளவுக்கு அதிகமாக இருக்கும். திருடர் பயம் குறையும். பஞ்சு, காட்டன் மில் தொழில்கள் முன்னேற்றம் ஏற்படும். விலைவாசி அடிக்கடி உயர்ந்து குறையும். விவசாயம் நன்றாக இருக்கும். சுனாமி எச்சரிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது என, பஞ்சாங்கங்களில் அடிப்படையில் உள்ளிட்ட பல்வேறு புத்தாண்டு பலன்கள் கூறப்பட்டன. முன்னதாக, கனிகள், பஞ்சாங்கங்களுடன் வேப்பம் பூ, வெல்லம் உள்ளிட்டவை பெருமாளுக்கு வைத்து பூஜை நடந்தது. இனிப்பும் கசப்பும் கலந்ததுமாக புத்தாண்டு அமைய வேண்டும் என்பதற்காக, வேப்பம் பூ வெல்லம் சேர்ந்த கலவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வெட்டிவேர் மாலையுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.