ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல் திறப்பு நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூபாய் 44 லட்சத்து 27 ஆயிரத்து 859, சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூபாய். 5 லட்சத்து 34 ஆயிரத்து 760, தங்கம் 21.8 கிராம், வெள்ளி 165 கிராம் காணிக்கையாக வரப்பட்டது கணக்கிடப்பட்டது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் விஸ்வநாதன், அறங்காவலர் ராஜா பெரியசாமி, அறநிலையத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.