பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
07:04
புதுடில்லி: தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர, பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவு
Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/naA4BP4guy
— Narendra Modi (@narendramodi) April 14, 2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு:
புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2021
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டர் பதிவு:
உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!
— Amit Shah (@AmitShah) April 14, 2021