Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: சித்திரை மாத ராசிபலன் துலாம்: சித்திரை மாத ராசிபலன் துலாம்: சித்திரை மாத ராசிபலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னி: சித்திரை மாத ராசிபலன்
எழுத்தின் அளவு:
கன்னி: சித்திரை மாத ராசிபலன்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
11:04


உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

புதிய நபர்களின் அறிமுகத்தை அதிகம் விரும்பும் உத்திரம் - 2, 3, 4 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்கள் வரும். எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்திதருவதாக இருக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது வேகமாகும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு  சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:  பிரத்தியங்கரா தேவி
சந்திராஷ்டமம்: மே 09, 10
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 24, 25

அஸ்தம்:
வெளி வட்டார தொடர்புகள் அதிகம் கொண்ட அஸ்தம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் மிகப் பெரிய மாற்றங்கள் வந்து சேரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். வீண்கவலை அகலும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில்  செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி ஏற்படும். பெண்களுக்கு  கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்:   சரபேஸ்வரர்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் - 14; மே 10, 11
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 25, 26, 29

சித்திரை 1, 2, பாதங்கள்:

எதிர்ப்புகளை நல்லப்டியாக சமாளிக்கும் சித்திரை 1, 2 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் பல விதத்திலும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கிறது. வீண் செலவுகள் குறையும். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் அகலும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு காரியதாமதம் அகலும். அரசியல்துறையினருக்கு வீண்கவலை நீங்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்:   வராஹப் பெருமாள்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் - 14, 15; மே 11
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 26, 29, 30

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar