Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: சித்திரை மாத ராசிபலன் கன்னி: சித்திரை மாத ராசிபலன் கன்னி: சித்திரை மாத ராசிபலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்மம்: சித்திரை மாத ராசிபலன்
எழுத்தின் அளவு:
சிம்மம்: சித்திரை மாத ராசிபலன்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
11:04


மகம்:
தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் மகம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி  இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம்:  தேவி கருமாரியம்மன்
சந்திராஷ்டமம்: மே 07, 08
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 22, 23

பூரம்:

பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளித்து வெற்றி பெறும் பூரம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மாற்றங்கள் வரும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்:   அஷ்டலட்சுமி
சந்திராஷ்டமம்: மே 08, 09
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 23, 24

உத்திரம் 1ம் பாதம்:

ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்துவதில் வல்லவரான உத்திரம்- 1 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:  பெருமாள்
சந்திராஷ்டமம்: மே 09, 10
அதிர்ஷ்டம்: ஏப்ரல் 24, 25

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar