பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
06:04
புதுச்சேரி; புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக அமைப்பு சார்பில் கருவடிகுப்பம் சித்தானந்தசாமி கோவில் அருகே தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, அமைப்பின் நிறுவனத் தலைவர் கலைவரதன் வாழ்த்துரை வழங்கினார்.பேராசிரியர் கிருஷ்ணா, சமூக சேவகர் பாண்டியன், முனைவர் செந்தில்குமார், டாக்டர் கலைவேந்தன், சாதனையாளர் வெங்கடேசன், முனைவர் நிக்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில், அமைப்பு செயலாளர் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார், காஞ்சனா கலைவரதன், விஷ்வா, விஜயகுமார் மோனிஷ் , பரமசிவம்,புஷ்பா, சம்பத், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டன.