பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
06:04
தேவகோட்டை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேவகோட்டையில்
சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்தியகல்யாணி கைலாசநாதர் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், ஆலமரத்து முனீஸ்வரர் கோவில், அபிராமி அம்மன் கோவில், இறகுசேரி மும்முடி நாதர் கோயில், ராம்நகர் சுந்தர விநாயகர் கோயில், கவுரி விநாயகர் கோயில், ஜெயங்கொண்ட விநாயகர் கோயில், ஆதிசங்கரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது. மாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோதண்டராமர் கோயிலில் ராமர் சீதை லட்சுமணர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வெள்ளி அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. செளபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை நடந்தது. திருகயிலேஸ்வரர் , பாகம்பிரியாள், காஞ்சி பெரியவாள் ஆகியோருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திருமணவயல் தியான மகா கணபதி கோயிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து விநாயகருக்கு வெண்ணெய் காப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.