Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிசேஷன் சிலைக்கு 230 டன் பாறை: ராட்சத ... உலக நன்மை வேண்டி அகல் விளக்கு பூஜை உலக நன்மை வேண்டி அகல் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
01:04

விருத்தாசலம்; கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

மாலையில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக்கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை 5:00 மணியளவில், சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனர்.

நெல்லிக்குப்பம்: கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar