பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
02:04
திருப்பூர் : கொரோனா அரக்கனை அடியோடு அழித்து, உலகை காக்க வேண்டுமென, கோவில்களில் தீபம் ஏற்றிவைத்து, பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு, ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மா, பலா, வாழை என முக்கனிகள் படைக்கப்பட்டிருந்தது.வாலிபாளையம் ஸ்ரீகல்யாணசுப்பிரமணியர் கோவிலில், தேவியருக்கும் மூலவருக்கும் மகா அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து, கல்யாண சுப்பிரமணியர், நீலப்பட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முலாம்பழம், ஆப்பிள், அன்னாசி, வெள்ளரி, பலா, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகள் படைக்கப்பட்டிருந்தது.
முக்கனி படைப்பு: போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்கள் முத்திரிக்கப்பட்டு, அருகே உள்ள விநாயகர் கோவில்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலமாக சென்ற பக்தர்கள், தீர்த்தத்தால், விநாயகருக்கு அபிேஷகம் செய்து, கொரோனாவில் இருந்து உலகை காக்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். மாரியம்மன் மஞ்சள்காப்பு அலங்காரத்தில், எலுமிச்சங்கனி மாலை அணிந்து அருள்பாலித்தார்.
கோல்டன்நகர் கருணாகரபுரி ஸ்ரீசக்திவிநாயகர் கோவிலில், தீர்த்தக்குட அபிேஷகமும், தங்ககவச அலங்காரமும் நடந்தது.அணைக்காடு, சிவசக்தி விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாரியம்மன், சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அரண்மனைப்புதுார் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. இதேபோல், விநாயகர் கோவில், அம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில், அதிகாலையில் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன.
மகாபிேஷகம்: தொங்குட்டிபாளையம், சுயம்பு காரணப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் வழிபட்டனர். தமிழ்புத்தாண்டையொட்டி, வெள்ளி கவச அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். கோவில்வழி பெரும்பண்ணை வரதாராஜ பெருமாள் கோவிலில், தாயார்களுக்கும், எம்பெருமாளுக்கும் மகா அபிேஷகம் நடந்தது. பக்தர்கள், முக்கனி உள்ளிட்ட பழவகைகளை எடுத்து வந்து, பெருமாளுக்கு படைத்து வழிபட்டனர். காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீபிலவ ஆண்டு பஞ்சாங்கள் வாசிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்தபடி சென்று, தரிசனம் செய்து வழிபட்டனர்.கொரோனா அரக்கனை அடியோடு அழித்து, உலகை காக்க வேண்டுமென, வேண்டுதல் நடத்தி, பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.