பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
04:04
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள, சென்னகேசவப் பெருமாள் கோவிலில், சித்திரை தேர் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதில், சுற்றுவட்டார விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த தேங்காய், பழம், கரும்பு, நிலக்கடலையை கொண்டு வந்து, தேரில் கட்டி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்துச்சென்று வழிபடுவர். தேர் திருவிழா வரும், 18ல், கொடியேற்றத்துடன் தொடங்க விருந்தது. ஆனால், கொரோனாவால் கடந்தாண்டை போன்று, இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வரும், 18 முதல், கோவில் மண்டபத்தில், சென்னகேசவப்பெருமாள் உற்சவமூர்த்திக்கு தினமும் அலங்காரம், பூஜை நடக்கும். அதில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து, பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கஸ்தூரி கூறினார்.