பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
04:04
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல், கடந்தாண்டு நவ., 26ல் திறக்கப்பட்டது. அதன் பின்பு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததை திறந்து எண்ணினர். அதில் நிரந்தர உண்டியல் எட்டு, திருப்பணி உண்டியல் ஒன்று என ஒன்பது உண்டியல்கள் திறந்தனர். நிரத்தர உண்டியல் எட்டில், 56 லட்சத்து, 40 ஆயிரத்து, 325 ரூபாய் ரொக்கம் இருந்தது. திருப்பணி உண்டியலில், மூன்று லட்சத்து, 95 ஆயிரத்து, 689 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 60 லட்சத்து, 36 ஆயிரத்து, 14 ரூபாய், 145 கிராம் தங்கம், ஒரு கிலோ, 968 கிராம் வெள்ளி, இருந்தது. உண்டியல் திறப்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் அருள்குமார்,ஆய்வாளர் தேன்மொழி, தக்கார் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் உட்பட தன்னார்வலர்கள் காணிக்கையை எண்ணுவதில் உதவி புரிந்தனர்.