பாதுகாப்பாக சித்திரை திருவிழா; ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2021 04:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாக்களை கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் அரசு நடத்த வேண்டும் என ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா கூறியுள்ளதாவது: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை கொரோனாவை காரணம் காட்டி நடத்தாமல் இருப்பது பக்தர்களை வேதனையடைய வைத்துள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மூலம் சித்திரை திருவிழா அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும், என்றார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது: கொரோனாவை காட்டி வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அரசு கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ள மதுக்கடைகளை வழக்கம் போல செயல்பட அனுமதித்துள்ளது. ஆனால் ஹிந்துக்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கிறது. ஆகம விதிகளின்படி சித்திரை திருவிழாவின் போது நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். பலஆண்டுகளாக நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வுகளை பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்த வேண்டும், என்றார்.