அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2021 04:04
மதுரை : அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என மதுரை கலெக்டர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்., 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. 2வது அலை வீச வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக கூட்டம் கூட்ட கூடாது. கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டு, இரவு 10:00 மணி வரை மக்கள் வழிபாட்டிற்காக அரசு நிலையான வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. தியேட்டர்களில் புதிய படம் முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி அனுமதிக்கப்படுகிறது. 50 சதவீதம் இருக்கைகளை மட்டுமே அனுமதி. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், என கூறியுள்ளார்.