ராமானுஜர் ஜெயந்தி: பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2021 12:04
உடுமலை : ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் திருநாளில் அவதரித்த ராமானுஜர், தனது 120-ஆவது வயதில் திருநாடு (பரமபதம்) எழுந்தருளினார். அவரது திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமானுஜர், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.